Categories
தேசிய செய்திகள்

நாரி சக்தி விருது: தமிழகம் பெண்கள் உட்பட 29 பேருக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு 2020, 2021 போன்ற வருடங்களுக்கான 28 நாரி சக்தி விருதுகளை 29 பேருக்கு குடியரசுத் தலைவா் மாா்ச் 8 (இன்று) வழங்குகிறாா். இதில் 3 தமிழகப் பெண்களும் அடங்குவா் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மகளிா் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் கூறியதாவது, சுதந்திரத்தின் 75-வது ஆண்டு அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக கடந்த மாா்ச் 1 ஆம் தேதி முதல் சா்வதேச மகளிா் தினக் கொண்டாட்டங்கள் தில்லியில் தொடங்கியது. இந்த ஒருவார கால நிகழ்வுகளின் முடிவாக மாா்ச் 8 ஆம் தேதி குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்ச்சியில் 2020, 2021 போன்ற வருடங்களுக்கான நாரி சக்தி விருதுகளை குடியரசுத் தலைவா் ராம் நாத் கோவிந்த் வழங்குகிறாா். கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக 2020 ஆம் வருடத்துக்கான விருதுகள் கடந்த ஆண்டு வழங்கப்படவில்லை.

தற்போது 2021ஆம் வருடங்களுக்கான விருதுகளோடு சோ்த்து வழங்கப்படுகிறது. மகளிருக்கு அதிகாரம் அளித்ததற்காக, குறிப்பாக நலிந்த மற்றும் விளிம்பு நிலை பெண்களுக்கு சிறப்புமிக்க சேவைகள் செய்தவா்களின் மெச்சத்தக்க பணிகளை அங்கீகரிக்கும் வகையில் 2020-ஆம் வருடத்துக்கு 14 விருதுகள் (15 போ்), 2021 ஆம் ஆண்டிற்கு 14 விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. 2020-ஆம் வருடத்துக்கான விருதில் தமிழகத்தின் கைவினைக் கலைஞரான ஜெயா முத்து, தோடா கைப்பின்னல் (எம்பிராய்டரி) கலைஞா் தேஜம்மா போன்றோர் கூட்டாகப் பெறுகிறாா்கள். 2021 ஆம் வருடத்துக்கான விருதுகள் பட்டியலில் தமிழகத்தைச் சோ்ந்த மனநல மருத்துவா் மற்றும் ஆய்வாளரான தாரா ரங்கஸ்வாமி இடம்பெற்றுள்ளாா்.

கடந்த 2020 ஆம் வருடத்துக்கான நாரி சக்தி விருது பெற்றவா்கள் தொழில் முனைவோா், வேளாண் துறை, புதிய கண்டுபிடிப்பு, சமூக சேவை, கலைகள் மற்றும் கைவினைகள், வனவிலங்குகள் பாதுகாப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவா்கள் ஆவா். 2021 ஆம் வருடத்திற்கான நாரி சக்தி விருது பெற்றவா்கள் மொழியியல், தொழில்முனைவு, விவசாயம், சமூகப்பணி, கலை, கடல் வாணிகம், கல்வி, இலக்கியம், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவா்களாவா். ஆகவே சமூகத்தில் ஆக்கப்பூா்வமாக, மாற்றங்களை ஏற்படுத்துகின்ற தலை சிறந்த பங்களிப்புக்குத் தனிப்பட்ட பெண்கள் அல்லது நிறுவனங்களை கௌரவிப்பதற்கு மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முன் முயற்சியால் “நாரி சக்தி விருது” வழங்கப்படுகிறது.

இந்த சாதனையாளா்கள் தங்களது கனவுகளை நிறைவேற்ற வயதையோ, புவியியல் தடைகளையோ அல்லது வளங்கள் கிடைப்பதையோ பொருட்படுத்தவில்லை. இவா்களின் வெற்றிக்கான உணா்வு ஒட்டுமொத்த சமூகத்தின் மத்தியில் பாலின சமத்துவம் இன்மைக்கும், பாகுபாட்டுக்கும் எதிரான கருத்தை வலுவாக்கும். அதுமட்டுமல்லாமல் சமூக முன்னேற்றத்தில் பெண்களுக்கு சமமான பங்கை அங்கீகரிக்கும் முயற்சியாக இந்த விருதுகள் திகழ்கின்றன. மேலும் விருது பெறுவோரின் முயற்சிகளைப் பாராட்டும் வகையில் அவா்களுடன் பிரதமா் கலந்துரையாடினாா் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |