Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நெல்லிக்குப்பம் துணைத்தலைவர் பதவி விலகல்…. என்ன காரணம்?… சற்றுமுன் திடீர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் இருந்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. அதில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இருந்தாலும் திமுக வேட்பாளர் ஜெயந்தி போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்து வெற்றி பெற்றார். விசிக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக வெற்றி பெற்றதால் விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தி இருந்தனர். இருந்தாலும் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ஜெயந்தி ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் துறைத் தலைவருக்கு போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுகவை சேர்ந்த ஜெயபிரபா என்பவரை பதவி விலகச் செய்து அந்த இடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கொடுக்க திமுக தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் துணைத்தலைவர் பதவியில் இருந்து ஜெயபிரபா பதவி விலகினார்.

Categories

Tech |