Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவிற்கு திடீர் விசிட் அடித்த இளையராஜா…. புகைப்படம் வைரல்…!!!

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் 1992 ஆம் வருடம் ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். இவர் மேலும் இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் பெற்றிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் பெண் இசைக்கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் துபாயில் ஆண்டாண்டு ஆண்டுகளுக்கு இசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றார். சென்ற இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் தாக்கம் இருந்ததால் நடத்தவில்லை. தற்போது துபாயில் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்.

மேலும் இசைஞானி இளையராஜாவும் துபாயில் தான் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தும் ஸ்டூடியோவிற்கு திடீரென்று சென்றுள்ளார். அப்போது ரகுமானும் இளையராஜாவும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஏ.ஆர்.ரஹ்மான் பதிவில் கூறியுள்ளதாவது இளையராஜா எங்கள் ஸ்டூடியோவிற்கு வந்தது மிக்க மகிழ்ச்சி. வருங்காலத்தில் இளையராஜா எங்கள் இசை குழுவிற்காக இசையமைப்பார் என நம்புகின்றேன் என பதிவிட்டிருந்தார்.

Categories

Tech |