Categories
தேசிய செய்திகள்

மக்களே செம குட் நியூஸ்…! பென்சன் திட்டத்தில் புதிய வசதி…. மத்திய அரசு அறிமுகம்…!!!!

பென்சன் தொகைக்கு  தானம் வழங்கும்’Donate-a-pension’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அமைப்புசாரா துறையில் அதற்கான பிரதான் மந்திரி ஷரம் யோகி மாந்தன் யோஜன எனும் திட்டத்தை மத்திய மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது புதிய வசதி ஒன்று சேர்க்கப் பட்டுள்ளது. ‘Donate-a-pension’ எனும் பெயரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் பென்சன் தொகையை அன்பளிப்பாக வழங்க முடியும். பிரதான் மந்திரி ஷரம் யோகி மாந்தன்  திட்டத்தின் கீழ் அமைப்புசாரா துறையை சார்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த புதிய  முயற்சியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தை மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் இன்று தொடங்கியுள்ளார். இத்திட்டத்தில் அவரும்  உதவி வழங்கிய சிறப்பான தொடக்கம் தந்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ஓட்டுநர்கள், தோட்டக்காரர்கள் போன்ற பல்வேறு பணிகளுக்கு உதவி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் உதவி செய்யலாம். இந்த உதவி அமைப்பு சாரா தொழிலாளர்கள் சென்றடையும். மத்திய தொழில்துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் தனது தோட்டக் காரருக்கு உதவும் வகையில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இதன் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். நாட்டு மக்கள் அனைவரும் தங்களுக்கு உதவியாக இருக்கும் ஓட்டுநர்கள், தோட்டக்காரர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா பணியாளர்களுக்கு தங்களது பங்களிப்பை வழங்கி உதவி செய்ய வேண்டும் எனவும் இதற்கான உதவிக்கரம்ஷ்ரம் யோகி மாந்தன் திட்டத்தின் மூலமாக வழங்கப்படுகிறது. மேலும் மத்திய அரசு ஏற்று நடத்தியது வரவேற்பை பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |