Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்பவே ஆரம்பிச்சிருச்சா…. நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு…. வெகு தூரம் செல்ல வேண்டிய அவலநிலை….!!

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலில் இப்போதே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக திருஉத்திரகோசமங்கை அருகே உள்ள ஆணைகுடி பகுதியில் பொதுமக்கள் குடிக்கவும் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள பெண்கள் வெகுதூரம் நடந்து சென்று தண்ணீர் குடங்களை தலையிலும், தள்ளுவண்டியிலும் சுமந்து கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |