Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச்.. 8) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு… மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு…!!!!!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி மாதம் கொடை விழாவை முன்னிட்டு இன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். பெண்கள் தலையில் இருமுடி கட்டு சுமந்து வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபாடு செய்வதால் இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வருகை தருவார்கள்.

கேரளாவில் ஆண்கள் செல்லும் சபரிமலை எப்படி புகழ் பெற்றது. அதேபோல இந்த கோயிலும் புகழ்பெற்றது. சபரிமலைக்கு ஆண்கள் 41 நாட்கள் விரதமிருந்து வழிபடுவது போல ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கொடை விழாவையொட்டி கேரளத்து பெண்கள் 41 நாட்கள் விரதமிருந்து வழிபடுவார்கள். இதில் கல்யாண வரம், குழந்தை வரம், உடல் உறுப்பு குறைபாடு, கண் திருஷ்டி, தோஷம், தலைவலி  போன்ற பிரச்சனைகளுக்கு இங்கே தீர்வு கிடைக்கும். இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கோடை விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழாவின் முதற்கட்டமாக கொடியேற்றம் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி தொடங்கியது.

அதன்பின் முக்கிய நிகழ்வான மாசி திருவிழா மார்ச்  8 ம் தேதி நடைபெற உள்ளது. பத்தாவது நாள் இரவு ஒடுக்கு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது. இதனால் இன்று (மார்ச் 8) கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசின் முக்கிய பணிகளுக்கான தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் மட்டும் தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் எனவும் இந்த விடுமுறையால் ஏப்ரல் 9ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை பணி நாளாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |