ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று உருவாகின்ற கூடுதல் பணிகளால் சிரமம் கொஞ்சம் ஏற்படலாம். பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவது அவசியம். தொழில் வியாபாரம் ஓரளவு வளர்ச்சியைக் கொடுக்கும். பணவரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். பொருட்களை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
இன்று கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோசம் ஏற்படும். பயணத்தின் பொழுது ஏற்பட்ட தடங்கல்கள் அனைத்துமே நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைபட்ட பணஉதவி கிடைக்கும். இன்றையநாள் ஓரளவு சிறப்பாக தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ஆசிரியர்களின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்