தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை வேலை நாள் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்களின் நேரடி கல்விமுறை அதிகம் பாதிக்கப்பட்டது. அதை கருத்தில்கொண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனம் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்புக்கு பின்னரும் பல்வேறு தரப்பிலிருந்து மாணவர்களுக்கு இந்த வருடமாவது இறுதித்தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13-ம் தேதி வரையில் பள்ளி வேலைநாள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 2-ஆம் தேதி முதல் 4 ம் தேதி வரை செய்முறை தேர்வு நடத்தப்படும் மற்றும் 6 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்விற்கான முடிவுகள் மே 30-ஆம் தேதி வெளியிடப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரையில் பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை காலங்களில் பள்ளி, வகுப்புகள் நடத்தப்படுவதால் நோய்த்தொற்று ஏற்படும் என மருத்துவர்கள் கூறுவதாகவும், கோடைகாலம் அனைத்து சனிக்கிழமைகளிலும் வேலைநாள் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என்ற நிலை, 13-ஆம் தேதி வரை பள்ளிகளை நடத்துவது என்பது தேவையற்றது என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொது செயலாளர் கூறியுள்ளார். மத்திய அரசு பள்ளிகள் அனைத்தும் தற்போது தேவர்களை நடக்கத் தொடங்கியுள்ளன. ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதிக்குள் அனைத்து தேர்வுகளும் முடிவு பெறும். இதனால் இந்த நடைமுறையை பின்பற்றி ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்து தேர்வுகளையும் முடித்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.