பெலாரஸ் நாட்டின் பாராசூட் படைப்பிரிவினர் ரஷ்யாவிற்கு ஆதரவளிக்கும் வகையில் உக்ரைனில் களம் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கார்கிவ் மற்றும் கீவ் நகரங்களில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் சமீபத்தில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டில் நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பெலாரஸ் நாட்டின் பாராசூட் படைப்பிரிவினர் ரஷ்யாவிற்கு ஆதரவளிக்கும் வகையில் உக்ரைனில் களம் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பெலாரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இணையதளங்களில் பெலாரஸ் பாராசூட் படையினர் உக்ரைனில் சைட்டோமர், கார்கிவ், கீவ், செர்னிஹிவ் ஆகிய நகரங்களின் அருகில் இருப்பதாக செய்தி பரவி வருகிறது. இதை நாங்கள் மறுக்கிறோம் பெலாரஸின் அணைத்து படைகளும் போலவே பாராசூட் படையினரும் அங்கு தான் உள்ளனர். மேலும் அவை தலைமை தளபதி உத்தரவிடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது