Categories
தேசிய செய்திகள்

சார் சார்…. “என்ன டீச்சர் அடிக்கிறாங்க” போலீசில் புகார் கொடுத்த மாணவன்…!!!!

தெலுங்கானாவில் மூன்றாம் வகுப்பு மாணவன் டீச்சர் அடிப்பதாக காவல் நிலையத்திற்கு தனியே சென்று புகார் அளித்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பயின்ற மாணவன் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மூன்றாம் வகுப்பு மாணவன் அணில்  தனது ஆசிரியர் சனி,வெங்கட் ஆகியோர் அடிப்பதாக மகப்பூர்  மாவட்டம் பயாராம் நகர காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

சிறுவனின் குற்றச்சாட்டை ஏற்ற போலீஸார் உடனடியாக பள்ளிக்கு சென்று மாணவர்களை அடிக்கக்கூடாது என ஆசிரியருக்கு அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுவனுக்கும் அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மூன்றாம் வகுப்பு சிறுவன் ஆசிரியர் தன்னை அடிப்பதாக காவல் நிலையத்திற்கு தனியே சென்று புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Categories

Tech |