உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே நடைபெற்று வரும் போர் அந்த இரு நாடுகள் தவிர உலக நாடுகள் பலவற்றிற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் உக்ரேனின் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. ஏற்கனவே இந்திய மாணவர்கள் சிலர் உயிரிழந்த நிலையில் எதிர்க் கட்சிகளும் பொதுமக்களும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் அரசு தீவிரம் காட்ட வேண்டுமென அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க முழுமூச்சாக நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் அதன் உச்சகட்டமாக மோடி ரஷ்யா அதிபர் புதின்னுடன் பேசி 6 மணி நேரத்திற்கு போரை நிறுத்தி அங்குள்ள இந்தியர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.