மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மணவாளக்குறிச்சி அருகே கல்லடிக்குறிச்சி பகுதியில் சுதர்சனம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 20 வயதுடைய ஸ்ரீஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீஜி ஒரு வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் சாத்தன்விளை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது ஸ்ரீஜியின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் ஸ்ரீஜி உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் ஸ்ரீஜியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பிறகு ஸ்ரீஜி மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகன் மற்றும் கௌதம் இருவரும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீஜி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மணவாளக்குறிச்சி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.