Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா முதல் மற்றும் 2-ஆம் அலைகள் வரலாற்றை புரட்டிப் போடும் வகையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது. அதேபோல் சம்பந்தப்பட்ட துறையினரும், அரசு ஊழியர்களும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணியில் மிகவும் துடிப்புடன் செயல்பட்டனர். அரசு மற்றும் அரசு ஊழியர்களின் மகத்தான பணிகளால் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது.

இதனால் தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு முன்னதாக கொரோனா சிகிச்சை மருத்துவ காப்பீட்டில் சேர்க்கப்பட்டது. அதன்படி ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். அதோடு மட்டுமில்லாமல் தமிழக அரசே அரசு ஊழியர்களின் கொரோனா சிகிச்சை செலவையும் ஏற்கும் என்று அறிவித்தது. இந்நிலையில் காரைக்குடியை சேர்ந்த ஒருவர் கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் விடுமுறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதில் அளித்த மனிதவள மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளர் அகிலா, “கொரோனா நோய்தொற்றால் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி அவர்கள் சிகிச்சை பெற்றுக் கொண்ட நாட்கள் மற்றும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் முழுமைக்கும் சிறப்பு தற்செயல் விடுப்பு மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் வழங்கப்படும். மேலும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட பகுதியில் உள்ள ஊழியர்கள் அதற்குரிய அறிவிப்பினை சமர்ப்பித்து சிறப்பு தற்செயல் விடுப்பாக தடைசெய்யப்பட்ட நாட்களை வழங்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |