Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அரபிக் குத்து பாடல்… டிரெட் மில்லில் நடனமாடிய பிரபல நடிகர்…!!!

டிரெட் மில்லில் நடிகர் அஸ்வின்குமார் அரபி குத்து பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாவில் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த நடிகர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் அரபி குத்துப்பாடல் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. இது ரசிகர்களிடையே மாபெரும் ஹிட்டாகி உள்ளது. இது யூட்யூபில் 12 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பாடலுக்கு பிரபலங்கள் பலரும் நடனமாடி வருகின்றனர்.

https://www.instagram.com/reel/CatjyF4I5mC/?utm_source=ig_web_button_share_sheet

இந்நிலையில் நடிகர் அஸ்வின் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரபி குத்துப்பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு டிரெட் மில்லில் அரபு குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளேன். அரபிக் குத்து அல்லது டிரெட் மில் குத்து எனக் கூறலாம் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன்னதாக அஸ்வின் வாத்தி கம்மிங் மற்றும் கமலின் அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு டிரெட் மில்லில் நடனமாடி இருந்தது குறிப்பிடதக்கது.

Categories

Tech |