Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டையில் மொபைல் நம்பர் மாற்றணுமா?…. இதோ எளிய டிப்ஸ்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

நாடு முழுவதும் முக்கியமான அடையாள ஆதாரமாக ரேஷன் கார்டுகள் இருக்கிறது. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்தும் ரேஷன் கார்டுகள் வாயிலாகவே வழங்கப்படுகின்றன. முன்பாக டீலர் ரேஷன் கார்டு என்று கொடுக்கப்பட்டு கார்டிற்கு தகுந்தாற்போல ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. தற்போது இந்த செயல்முறையானது டிஜிட்டல் முறையில் செய்யப்படுகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளதால் மக்கள் நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள்களை வாங்கி கொள்ளலாம்.

இதன் காரணமாக ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமானதாக ரேஷன் அட்டைகள் இருக்கின்றன. தற்போது ரேஷன் அட்டைகள் டிஜிட்டல் முறையில் உள்ளதால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், அதில் சிறுமாற்றம் என்றாலும் அதனால் பொருட்கள் வாங்க முடியாமல் போகலாம். இதனிடையில் கைரேகை மூலம் ரேஷன் பொருட்களை குடும்பத்தில் யார் வேண்டுமென்றாலும் வாங்கலாம். எப்படியென்றால் ஆதார் அட்டைகள் ரேஷன் கார்டுகளுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ரேஷன் அட்டைகளிலுள்ள மொபைல் எண் மற்றும் ஆதார் அட்டை மொபைல் எண் மாற்றமாக இருந்தால் அதில் பெரிய சிக்கல் ஏற்படும்.

அதுமட்டுமல்லாமல் பழைய எண் கொடுக்கப்பட்டிருந்தால் ரேஷன் அட்டைகளில் அதை மாற்றிக்கொள்ளலாம். அதனை ஆன்லைன் வாயிலாக எளிமையாக மேற்கொள்ளலாம். எனவே உங்களின் ரேஷன் கார்டில் பழைய மொபைல் எண் இருந்தால், ரேஷன் குறித்த புதுப்பிப்புகளைப் பெற இயலாது. இதனால் அதை எளிய முறையில் எப்படி மாற்றுவது என்பது தொடர்பான முழு விபரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ரேஷன் அட்டையில் மொபைல் எண் அப்டேட்

# மொபைல் எண்ணை அப்டேட் செய்ய முதலில் https://nfs.delhi.gov.in/Citizen/UpdateMobileNumber.aspx என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

# உங்கள் முன் ஒரு பேஜ் திறக்கும்போது, “உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் புதுப்பிக்கவும்” என்று இங்கே எழுதப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்.

# இந்நிலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள காலமில் உங்களின் தகவலை நிரப்பி பூர்த்தி செய்ய வேண்டும்.

# இதில் முதல் வரிசையில் “குடும்பத் தலைவரின் ஆதார் எண்/NFS ஐடி”-யை எழுத வேண்டும்.

# 2-வது பத்தியில் ரேஷன் கார்டு எண்ணை எழுத வேண்டும்.

#3-வது பத்தியில் குடும்பத் தலைவரின் பெயரை எழுத வேண்டும்.

# அதன்பின் கடைசி பத்தியில் உங்கள் புதிய மொபைல் எண்ணை உள்ளிட்டு சேவ் செய்யவும்.

# இப்போது உங்களின் மொபைல் எண் புதுப்பிக்கப்படும்.

Categories

Tech |