உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளது. இதுவரை 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கியுள்ளோம். அதோடு ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுய தொழிலில் ஈடுபடுவதற்கு பல்வேறு நிதி உதவிகள் செய்யப்பட்டுள்ளன. வரும் தேர்தல் முடிந்து பாஜக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாநகர கார்ப்பரேஷன் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று பெரும்பான்மையாக ஆட்சியை பிடிக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே உத்திரபிரதேசத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை ஆறு கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.