Categories
அரசியல்

கடலூர் திமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்….!! துரைமுருகன் அறிவிப்பு…!!

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கடலூரில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கோ. ஐயப்பன். இவர் கடலூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் அமைச்சர் கோ. ஐயப்பனை திடீரென கட்சியின் பொறுப்புகள் மற்றும் பதவிகளிலிருந்து நீக்கம் செய்துள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது திமுகவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. கடலூர் திமுக உறுப்பினர் ஐயப்பன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து விதமான கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் திரு.துரை முருகன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Categories

Tech |