Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலக கோப்பை 2022 : பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா ….! 107 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.இதில் இந்திய மகளிர் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் இன்று மோதியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் களமிறங்கியது.இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா- ஸ்மிர்தி மந்தனா ஜோடி களமிறங்கினர்.

இதில் ஷபாலி வர்மா ரன் எடுக்காமல் ஆட்டமிழக்க,ஸ்மிர்தி மந்தன 52 ரன்னில் வெளியேறினார். மிடில் ஆர்டரில் விக்கெட்டுகள் இழந்தாலும், பின்வரிசை வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இதில் குறிப்பாக ஸ்னே ரானா 53 ரன்னும், பூஜா வாஸ்ட்ராகர் 67 ரன்னும் குவித்தனர்.இறுதியாக இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில்  7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது.இதன்பிறகு 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

ஆனால் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி தடுமாறியது. இதனால் பாகிஸ்தான் அணி 43 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 137 ரன்னில் சுருண்டது.இதனால் 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி  அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் ராஜேஸ்வரி கெயக்வாட் 4 விக்கெட்டும், ஜூலன் கோஸ்வாமி, ஸ்நேஹ் ராணா தலா 2 விக்கெட்டும், தீப்தி சர்மா, மேக்னா சிங் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

Categories

Tech |