ரஷ்யா, உக்ரைன் போர் இறுதியாக கடந்த ஒரு வாரமாக சர்வதேச சந்தைகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக கோதுமை, கச்சா எண்ணெய், இயற்கை வாயு, மக்காச்சோளம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கோதுமை விலையானது 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உலகின் மொத்த கோதுமை ஏற்றுமதியில் 30% ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து பெறப்பட்டு வந்த நிலையில், அவ்விரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட போர் கோதுமையின் விலை 40% வரை உயர்த்தியுள்ளது. உலகளாவிய உணவுப் பணவீக்கமும் 10 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. உக்ரைன் உலகின் ரொட்டி கூடை நாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது.