காரில் கஞ்சா கடத்தி வந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் சிலேட்டர் அன்பு நகர் பகுதியில் காரில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக பெருந்துறை காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இத்தகவலின் பேரில் பெருந்துறை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள்.அப்போது அந்த ரோட்டில் ஒரு கார் நின்றது. அதன் அருகே 8 பேர் கும்பலாக நின்றுகொண்டிருந்தன .அவர்கள் போலீசை பார்த்ததும் தெறித்து ஓட ஆரம்பித்தன. அவர்களை சுற்றி வளைத்து காவல்துறையினர் பிடித்தனர். பின்னர் அந்த காரை போலீசார் சோதித்து பார்த்த போது அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் 8 பேர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து அவர்களிடம் விசாரித்த போது ஈரோடு வேப்பம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்(46), திருச்சி உறையூரைச் சேர்ந்த அப்துல் ரகுமான்(43), சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த மற்றொரு அப்துல் ரகுமான்(52), பெருந்துறை காஞ்சிகோவிலை சேர்ந்த தர்மராஜ்(33), திருப்பூர் சர்க்கார் பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி(60), மற்றும் வடமாநிலம் பீகாரைச் சேர்ந்த கேமில் ஷா (25), ஜிதேந்தர் சகானி (27), நரேஷ் சகானி(37) ஆகிய 8 பேரும் நிறைய ஊர்களில் இருந்து 4 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து பெருந்துறை பகுதியில் விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் 8 பேரையும் கைது செய்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.