அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக செய்தி ஒன்று சமூக ஊடகங்களும், செய்திகளும் பரவிக் கொண்டிருக்கின்றன. அதன்படி அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் அகவிலைப்படி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் மாத சம்பளமும் உயரும். இதனை அடுத்து அகவிலைப்படி 3 சதவீதம் வரையில் அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஆகவே இந்த அகவிலைப்படி உயர்வு சுமார் 1 கோடி மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலைப்படி, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 31% சதவீதமாக உள்ளது. இந்நிலையில் 3 சதவீதம் உயர்ந்தால் மொத்தமாக 34 சதவீத அகவிலைப்படி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.90,000 வரை உயரும் என்று Zeebiz.com தகவல் தெரிவிக்கிறது.
இதுபற்றி வல்லுனர்கள் கூறியுள்ளதாவது, பணவீக்கத்தை பொறுத்து அரசு ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறினார். ஆனால் அகவிலைப்படிக்கான 18 மாத நிலுவைத்தொகை இன்னும் பாக்கி உள்ளது. எனவே அதை எதிர்பார்த்து காத்திருக்கும் ஊழியர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வும் சேர்ந்து கிடைத்தால், அவர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை கொடுக்கும். உதாரணமாக அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.30,000 எனில் அவருக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் பட்சத்தில், அவரின் மாதச் சம்பளத்தில் ரூ.900 அதிகமாக கிடைக்கும். அதாவது ஒரு ஆண்டுக்கு ரூ.10,800 வரை சம்பளம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.