தமிழக வட கடலோரத்தில் இருந்து 300 கி.மீ தொலைவில் தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அது தமிழக கரையை 36 மணி நேரத்தில் கடக்க வாய்ப்புள்ளது.
இது தமிழக கடற்கரையை நோக்கி இன்று (மார்ச்.6) நகர்வதால் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை உட்பட மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.