பதிவு செய்யப்பட்ட நெசவாளர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை ,பெங்களூரு ஆகிய பகுதிகளில் எல்லைகளில் இருக்கும் சித்ரதுர்கா, தாவணகரே, ஹாவேரி, தார்வாட், பெலகாவியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு தனியார் ஒப்புதலுடன் மெகா ஜுவல்லரி தொழிற்சாலை அமைக்கப்படும்.
பீதரில் மத்திய அரசின் உதவியுடன் 90 கோடி ரூபாய் செலவில் ‘சென்ட்ரல் இன்ஸ்டியூட் ஆப் பெட்ரோகெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி’ மையம் அமைக்கப்படும். கர்நாடகாவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நெசவாளர்களுக்கு வங்கிகளில் 8 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும் எனவும் நெசவாளர்களின் குழந்தைகளுடைய கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.