Categories
கிரிக்கெட் விளையாட்டு

வார்னேவின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடக்கும் ….! ஆஸி பிரதமர் அறிவிப்பு ….!!!

ஷேன் வார்னே-வின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அந்நாட்டின்  பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஜாம்பவான் ஷேன் வார்னே நேற்று திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்.மேலும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஷேன் வார்னே வர்ணனையாளராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் வீரர் ஷேன் வார்னே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் ,’ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களில் ஷேன் வார்னேவும் ஒருவர் ‘ என்று புகழாரம் சூட்டினார். மேலும் அவருடைய இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |