அமெரிக்காவில் நேற்று கேளிக்கை விருது நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நிவேடா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று இரவு மாடி குடியிருப்பில் கேளிக்கை விருது நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 10 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கேளிக்கை விருது நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் அறிந்த போலீசார் தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியது யார்? என்றும் எத்தனை பேர்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.