மேற்கிந்திய நாடுகள் தான் உக்ரைன் உடனான மோதலுக்கு காரணம் என்று பெலாரஸ் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவிற்கு பெலாரஸ் ஆதரவு அளித்து வருகிறது. இதற்கிடையில் ரஷ்ய அதிபர் புதினை பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் சுமார் 2 மணி நேரம் பேசியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் மற்றும் உக்ரைன் உடனான மோதல் குறித்து விவாதித்தனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அலெக்சாண்டர் லுகாஷென்கோ கூறியதாவது “உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவையும் பெலாரஸையும் மேற்கிந்திய நாடுகள் தான் தள்ளுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த பிரச்சனையில் பெலாரஸ் தலையிடும் வரை அவர்கள் விட மாட்டார்கள். இருப்பினும் தலையிட்டால் அது அவர்களுக்கு பரிசாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.