Categories
அரசியல்

“நீங்களே இப்படி பண்ணலாமா…??” உடன் பிறப்புகளால் செம டென்ஷனான ஸ்டாலின்…!!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளை பங்கிட்டுக் கொண்டன. ஆனால் ஒரு சில இடங்களில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை திமுகவினர் சிலர் எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடையச் செய்தனர். இதனால் கூட்டணி கட்சிகள் கடும் அதிர்ச்சி அடைந்தன. அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன், “கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். “கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானதாக இல்லை” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் அதிருப்தி தெரிவித்திருந்தார்.தெரிவித்திருந்தார்.

இதனால் கடும் கோபம் அடைந்த திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையின் உத்தரவை மீறி தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் உடனடியாக கட்சிப் பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் அல்லது அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்துகூட நீக்கப்படுவார்கள் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு இவ்வாறாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கட்சி பொறுப்பிலிருந்து உடனடியாக விலகிவிடு தன்னையும் வந்து நேரில் சந்திக்க வேண்டுமென ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒரு சில கழக உடன்பிறப்புகள் கட்சி தலைமையில் சொல்லை மீறி இவ்வாறு செய்ததை எண்ணி திமுக தலைவர் மிகவும் வருத்தத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |