பாகிஸ்தானில் நாளையிலிருந்து ஆஸ்திரேலிய அணி கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு பின்பு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
பாகிஸ்தானில் நாளை ஆஸ்திரேலிய அணி சுமார் 24 வருடங்களுக்கு பின்பு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் தொடர் மற்றும் ஒரு போட்டி கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இதனால் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு இருக்க பாகிஸ்தானில் வேகப்பந்து வீச்சை விட, சுழற்பந்து வீச்சுக்கு தான் பிட்ச் சாதகமாக இருக்கும். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் 2 ஸ்பின்னர்கள் களமிறங்கவுள்ளார்கள். அதுமட்டுமின்றி இதில் வார்னர், கவாஜா, லபுஷேன், ஸ்மித், மிட்செல், ஹெட் ஆகியோர் பேட்டிங் வரிசையில் உள்ளதால் ஆஸ்திரேலியா அணிக்கு பலம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹசன், ஆல்ரவுண்டர் பாஹிம், ஓபனர் அபித் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளார்கள். இதனால் பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இருப்பினும் இதில் முஹம்மது ரிஸ்வான், பாபர், ஷாஹீன் போன்றவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது அந்த அணிக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.