Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிக்கும் ”மாறன்”…. அசத்தலான புரோமோ வீடியோ ரிலீஸ்…. நீங்களும் பாருங்க….!!!

‘மாறன்’ படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் கைவசம் தற்போது மாறன், வாத்தி, திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் உள்ளன. இதனையடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”மாறன்”. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தனுஷின் மாறன் பட அசத்தலான புதிய ப்ரோமோ ! - Tamil Movie Cinema News

இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் சமுத்திரக்கனி, மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஹாட்ஸ்டார் OTT யில் மார்ச் 11ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |