Categories
உலக செய்திகள்

ரஷ்யா போர் எதிரொலி….!! “முடக்க செய்யப்பட்ட சமூக வலைத்தளங்கள்”….!!

ரஷ்யாவின் பல இடங்களில் பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.

ரஷ்யா உக்ரைன் மீது முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவை உலக நாடுகள் தனிமை படுத்தினாலும் அதனை கண்டுகொள்ளாமல் உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது தரை, வான், கடல் என மும்முனைகளிலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையில் ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கருத்துகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்யாவின் பல இடங்களில் பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. உக்ரைன் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் அதிகரித்து வருவதால் ரஷ்யா இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |