Categories
தேசிய செய்திகள்

ரஷ்யா உக்ரைன் போர் எதிரொலி…. பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. வெளியான ஷாக் நியூஸ்…!!!

கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பால் பெட்ரோல் டீசலின் விலையும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகில் சவுதி அரேபியாவுக்கு அடுத்து கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா உள்ளது. இங்கு தினமும் 1.10 கோடி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 10 சதவீத அளவுக்கு ரஷ்யாவின் பங்கு உள்ளது. மேலும் சீனா தினமும் 16 லட்சம் பேரால், கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறது. ஆனால் தற்போது உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளதால்,  கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து கொள்ள உள்ளனர்.

இதையடுத்து 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்தது. எனவே அடுத்த வாரம் முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. எனவே சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.  கடந்த 2014ஆம் ஆண்டுக்குப்பின் உக்ரைன் போரின் காரணமாக முதல் முறையாக, சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 110 டாலரை எட்டியுள்ளது.

எனவே இந்த கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்கள் அதிக இழப்பை சந்தித்து வருகின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 50 ரூபாய் அதிகரித்தால் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை தடுக்க முடியும் என ஜே.பி. மார்கன் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நிறைவேற்றுவதால் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகளை குறைத்து விலை அதிகம் உயராமல் பார்த்துக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டால், வருகின்ற ஏப்ரல், ஜூன் மாதங்களில் அதன் விலை 150 டாலரை எட்டும். எனினும் அக்டோபர் முதல் டிசம்பர் இல் 86 டாலராக குறைய வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

Categories

Tech |