Categories
தேனி மாவட்ட செய்திகள்

பொறியாளர் இல்லாமல் கட்டப்பட்ட தடுப்பணை…. செயற்பொறியாளரின் அதிரடி உத்தரவு….!!

காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் ஆய்வு செய்துள்ளார்.

தேனி மாவட்டம் கடமலை-மயிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை, சாக்கடை கால்வாய், சாலை வசதி, உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் அனிதா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இந்நிலையில் கடமலைக்குண்டுவில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகளை பார்வையிட்ட போது அங்கு ஒன்றிய பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள் இல்லாமல் தடுப்பணை கட்டப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கட்டிமுடிக்கப்பட்ட 17 மீட்டர் நீளமுள்ள தடுப்பணையின் அடித்தளத்தை இடித்துவிட்டு மீண்டும் கட்ட உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கட்டிடப் பணிகளுக்கு அரசு ஒப்புதல் இல்லாத சிமெண்டு மூட்டைகள் பயன்படுத்துவதை கண்டறிந்த அதிகாரிகள் அரசு ஒப்புதல் வழங்கியுள்ள சிமெண்ட் முட்டைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென பொறியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சோதனையின்போது கடமலை-மயிலை ஒன்றிய ஆணையாளர் கண்ணன், திருப்பதிமுத்து மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தங்கம், பொறியாளர் ராமமூர்த்தி என அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்துள்ளனர்.

Categories

Tech |