Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷ் மற்றும் ரஜினி முதலில் எங்கு சந்தித்தார்கள் தெரியுமா..? வெளியான செய்தி…!!!

நடிகர் தனுஷ் மற்றும் ரஜினி முதல் சந்திப்பு எப்போது நடந்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார் தனுஷ். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் அண்மையில் பிரிந்தனர். ரஜினி மற்றும் தனுஷ் ஒருவர் மேல் ஒருவர் அதிகம் பாசம் கொண்டவர்கள். தனுஷ் ஆரம்பத்திலிருந்தே ரஜினியின் மிகப்பெரிய ரசிகன். தனுஷ் நடிகர் ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அது தற்போது நடக்குமா என்ற சந்தேகம் இருக்கின்றது. ஆனால் இவர் ரஜினியின் படத்தை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினி மற்றும் தனுஷின் முதல் சந்திப்பு எங்கு நடந்தது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் கடந்த 2002ஆம் ஆண்டு காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படத்தின் மூலம் தனுஷ் மிகவும் பிரபலமானார். அப்போது ரஜினி திரைப்படத்தை பிரத்தியேகமாக பார்ப்பதற்கு தனது மகள் ஐஸ்வர்யாவுடன் வந்து படத்தை பார்த்தார். அப்போதுதான் ரஜினி மற்றும் தனுஷ் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொண்டுள்ளனர். தனுஷின் தந்தை, இயக்குனராக இருந்தாலும் தனுஷ் அப்போதுதான் ரஜினியை முதன்முதலில் சந்தித்துள்ளார். படம் குறித்து தனுஷை ரஜினி பாராட்டி பேசினார். அப்போது ரஜினியிடம் தனுஷ் நான் உங்கள் தீவிர ரசிகன் என்று கூறியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |