விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களுடைய கொடிக்கம்பத்தை வைப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் சமாதானம் செய்து கொள்வதற்கு தயாராக இல்லை. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பாலூர் பகுதியில் தி.மு.க கட்சி கொடி பக்கத்தில் தங்களது கட்சி கொடியை வைத்துள்ளனர்.
இவர்கள் மறுநாள் வந்து பார்க்கும் போது கொடிக்கம்பத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியுள்ளனர். இதனால் அந்த இடத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. எனவே காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.