ரஷ்ய நாட்டிற்கு உதவும் பெலாரஸ் நாட்டின் மீது உலக நாடுகள் தொடர்ந்து பொருளாதார தடைகளை அறிவித்து வருகின்றன.
ரஷ்ய படைகளை தங்கள் நாட்டில் குவிப்பதற்கு பெலாரஸ் உதவியது. மேலும், உக்ரைன் நாட்டிற்குள் பெலாரஸ் படைகள் நேரடியாக களமிறங்கியுள்ளன. இதனை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்தன. எனவே, ரஷ்யாவுடன் இணைத்து பெலாரஸ் நாட்டின் மீதும் உலக நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் ராணுவத்திற்குரிய தொழில்நுட்பத்திற்கான ஏற்றுமதியை பாதிக்கும் வகையில், அமெரிக்கா, புதிதாக தடைகளை அறிவித்திருக்கிறது. இதற்கு முன்பு, ஐரோப்பிய ஒன்றியம், பெலாரஸ் நாட்டின் விவசாயத்துறையை பாதிக்கும் வகையில், பல தடைகளை அறிவித்தது. தற்போது, ஜப்பான் நாடும் பெலாரஸ் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.