Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. சாதனை படைத்த ”அரபிக் குத்து” பாடல்….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!

”அரபிக் குத்து” பாடல் புதிதாக ஒரு சாதனையை படைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. ஏப்ரல் மாதம் ரிலீசாக இருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அரபிக் குத்து பாடல்; விஜய் ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி தகவல்! - Arabic  kuthu song; Shocking information to vijay fans

சமீபத்தில் இந்த படத்தின் முதல் சிங்கிள் ‘அரபிக் குத்து பாடல்’ வெளியானது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டானது. பல சாதனைகளை படைத்த இந்த பாடல் புதிதாக ஒரு சாதனையை படைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய அளவில் குறைந்த நாட்களிலேயே 4 மில்லியன் லைக்குகள் பெற்ற சிங்கிள் பாடல் என்ற சாதனையை இந்த பாடல் படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Categories

Tech |