Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

” கோவில் திருவிழா ” கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை…. போலீஸ் அதிரடி…!!

பட்டபகலில் 4 பவுன் தங்க நகையை திருடிய 2 பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மயானகொள்ளை திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவை காண்பதற்கு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் கிராமத்தில் வசிக்கும் ஜெயா என்பவர் வந்துள்ளார். இந்த திருவிழாவின் போது கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு ஜெயாவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை  திருடியுள்ளனர். இதை பார்த்த ஜெயா உடனே கூச்சலிட்டுள்ளார்.

அதன்பிறகு அங்கிருந்தவர்கள் அந்த 2 பெண்களையும் வசமாக பிடித்துள்ளனர். இதுகுறித்து மேல்மலையனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காளியம்மாள் மற்றும் கவிதா என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சகோதரிகள் ஆவார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இவர்கள் 2 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |