Categories
கிரிக்கெட் விளையாட்டு

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி ….விவரம் இதோ ….!!!

இந்தியா -அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.
வருகின்ற ஜூன் மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி  2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.இதனிடையே ஐபிஎல் தொடர் இம்மாதம்  26-ஆம் தேதி தொடங்கி மே 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதன் பிறகு தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து  5 போட்டிகள் கொண்ட     டி 20 தொடரில் பங்கேற்கிறது.
இத்தொடர் ஜூன் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதன் பிறகு இந்தியா-அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி ஜூன் 26-ஆம் தேதி முதல் தொடங்கி 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை  அயர்லாந்து கிரிக்கெட் வாரியம்  தங்களது டுவிட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளது.
https://twitter.com/cricketireland/status/1498658873095372805

Categories

Tech |