கீவ் நகரில் ரஷ்ய படைகள் முன்னேறாமல் தடுக்க சாலைகளில் மனித கேடயமாக மக்கள் திரண்டு தடைகளை ஏற்படுத்தி உள்ளனர்.
உக்ரைன் மீது ரஷிய படைகள் 7வது நாளாக உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் தற்போது ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது. இந்த நிலையில் கீவ் நகரில் ரஷ்ய படைகளை முன்னேறாமல் தடுக்க உக்ரேன் மக்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கீவ் நகரில் பல்வேறு இடங்களில் சேதத்திற்கு உள்ளான ரஷ்ய வாகனங்களைக் கொண்டு பொதுமக்கள் தடைகளை ஏற்படுத்தி உள்ளனர்.
ரஷ்ய படைகளை முன்னேற விடாமல் தடுக்க சாலைகளில் மனித கேடயமாக மக்கள் திரண்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் போர்ட் அரிசியா அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அணுமின் நிலைய ஊழியர்கள் ரஷ்ய படைகள் முன்னேறாமல் இருக்க சாலைகளில் திரண்டுள்ளனர்.