Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மார்ச் 4″…. புதிய சரித்திரம் படைப்போம்…. சவால் விடுத்த இலங்கை அணி கேப்டன்…. திக்குமுக்காடுமா இந்தியா?….!!

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை கண்டிப்பாக வீழ்த்திக் காட்டுவோம் என்று இலங்கை அணியின் கேப்டன் சவால் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அபார வெற்றியை பெற்றுள்ளது. இவ்வாறு இருக்க மொஹாலியில் மார்ச் 4ஆம் தேதி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்திய, இலங்கை அணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கிடையே இந்தியாவில் ஒருமுறைகூட இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இலங்கை டெஸ்ட் அணி கேப்டன் திமுத் கருணரத்னே பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுக்கும்போது இந்திய அணிக்கு அதிரடியான சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

அதாவது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை கண்டிப்பாக நாங்கள் தோற்கடிப்போம் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இலங்கை ஒரு முறைகூட இந்தியாவில் டெஸ்ட் போட்டியை வென்றதில்லை என்ற சரித்திரத்தை இம்முறை கண்டிப்பாக மாற்றி எழுதுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்திய அணியை கண்டிப்பாக வீழ்த்தி காட்டுவோம் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

Categories

Tech |