சென்னை விமான நிலைய கழிவறையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் யஸ்பால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யஸ்பாலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த யஸ்பால் 2017 ஆம் ஆண்டு முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.