Categories
அரசியல் மாநில செய்திகள்

சோலிய முடிச்ச தளபதி…. ”செந்தில் பாலாஜிக்கு செக்” …. ஆட்டம் காணும் கரூர் …!!

தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் திமுக நிர்வாகிகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

தமிழக்கத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக முன்னிலையில் இருந்தாலும் அக்கட்சிக்குள் இருக்கும் உள்கட்சி பூசல்களையும் இந்த முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது கட்சியின் தலைமையில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதில் முதன்மையான இடத்தில் உள்ளது கரூர் மாவட்ட முடிவுதான்.

அங்குள்ள 12 மாவட்ட கவுன்சிலர்களில் 9 இடத்தை அதிமுக பிடித்துள்ளதால் திமுகவுக்கு வெறும் 3 இடம் மட்டும் தான் கிடைத்துள்ளது.அதே சறுக்கலை தான் ஒன்றிய கவுன்சிலில் முடிவுகளும் வெளிப்படுத்தியுள்ளது. மொத்தமுள்ள 115 இடங்களில் திமுக வெறும் 33 இடங்களை மட்டும் பிடித்து அதிமுக 66 இடங்களை பறி கொடுத்துள்ளது.

தொடர்புடைய படம்

கரூர் மாவட்டத்தில் இருந்து அதிமுகவில் அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி அமமுக சென்று திமுகவில் இணைந்த கடந்த கால நினைவு நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்போது செந்தில் பாலாஜிக்கு கடும் பில்டப் கொடுக்கப்பட்டது. திமுகவில் இணையும் விழாவில் முக. ஸ்டாலின் கூட செந்தில்பாலாஜியை மிகவும் போற்றிப் புகழ்ந்தார். அதை கருத்தில் கொண்டு தேர்தல் வேலைகளில் செந்தில்பாலாஜி தனித்துவம் மிக்கவராக செயல்படுவார் என்றும் , அவரால் கரூர் திமுகவுக்குப் பெரும் பலம் கிடைக்கும் என்றும் ஸ்டாலின் கருதி கட்சியில் செந்தில் பாலாஜிக்கு தனி முக்கியத்துவம் கொடுத்தார்.

சுனில், சபரீசன் ஆகியோரால் தான் செந்தில்பாலாஜி திமுகவுக்குச் சென்றார். எனவே முக ஸ்டாலினுடன் தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமானவராக  வலம் வந்தார் செந்தில்பாலாஜி. இதனால் கட்சியின் மாவட்ட பொறுப்பும் சில நாட்களிலேயே செந்தில் பாலாஜியை தேடி வந்தது.பொதுவாகவே திமுக தலைவர் முக.ஸ்டாலின் கட்சி ரீதியாக யாரையும் சந்திக்க வீடு தேடிவர அனுமதிப்பது கிடையாது. திமுகவின் முக்கிய நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகளை மட்டுமே வீட்டில் சந்திப்பார்.

தொடர்புடைய படம்

ஆனால் இந்த நிலையை உடைத்தெறிந்து ஸ்டாலினை எப்போது வேண்டுமெனாலும் வீட்டில் சந்திக்கும் உரிமையை பெற்று சக கழகத்தினரையும் வியப்பில் ஆழ்த்தினார்.ஸ்டாலின் – செந்தில் பாலாஜி நெருக்கத்தை உணர்ந்த மூத்த கழக உபி_க்கள் பலரும் தலைவரை சந்திக்க நாம கத்துகிடக்கோம் ஆனால் இவர் தலைவர் வீட்டுக்கு போய் சந்தித்துவிட்டு வாரார் இதுலாம் நல்லதுக்கில்லை. எப்ப செந்தில்பாலாஜியைத் தலைவர் தள்ளிவைக்கப்போறாரோ?’ என்று புலம்பிய நாட்களும் உண்டு.

ஆனால் இப்போது மூத்த கழக உபி_க்களின் அப்போதைய புலம்பல் நடந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள் திமுக அறிவாலய வட்டாரங்கள். உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்குப் பின் செந்தில் பாலாஜி இருமுறை ஸ்டாலின் வீடு தேடிப் பார்க்க போயிருக்கிறார். எப்போதும் செந்தில் பாலாஜிக்கு ராஜ வரவேற்பு கிடைக்கும் நிலையில் இம்முறை ரிசப்ஷனில் அமரவைத்துவிட்டு, ‘தலைவர் உங்களை அறிவாலயத்துக்கு வரச்சொன்னார்’ என்று பதில் வந்துள்ளது பாலாஜியை அதிர வைத்துள்ளது.

செந்தில் பாலாஜி ஜோதிமணி க்கான பட முடிவு

கரூர் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கடுமையான முறைகேடுகளைச் செய்து மொத்தமாக வெற்றி பெற்றுவிட்டதாக தான் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜியும் ,  காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணியும் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்திலும் இறங்கியதோடு நீதிமன்ற கதவையும் தட்டுள்ளார்கள். திமுக தலைமைவுக்கும் தோல்வி குறித்து இதை தான் செந்தில் பாலாஜி தெரியப்படுத்தியுள்ளார்.

கரூர் மாவட்ட நிர்வாகம் சரியில்லை என்று சொல்லிதான் ஸ்டாலின் செந்தில்பாலாஜியைக் கொண்டு வந்தார். ஆனால் செந்தில்பாலாஜியோ கட்சி தலைமையிடம் காட்டும் நெருக்கத்தை, தொண்டர்களிடம் காட்டுவதில்லை என்று உள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் இருந்து ஸ்டாலினுக்குப் புகார்கள் பிறந்துள்ளது. அது தான் தபோதைய உள்ளாட்சித் தேர்தலிலும் முடிவாக வெளியாகி நிரூபணம் ஆகி விட்டது என்று நினைக்கிறார் ஸ்டாலின்.

செந்தில் பாலாஜி க்கான பட முடிவு

இதனால் இருந்த ஆத்திரத்தினால் தான் வழக்கமாக செந்தில்பாலாஜியை வீட்டில் வைத்து சந்தித்து பேசும் ஸ்டாலின் இம்முறை அறிவாலயத்துக்கு வரச் சொல்லி விட்டார். செந்தில்பாலாஜியைப் பொறுத்தவரை ஸ்டாலின் வைத்த செக்தான் இது. மேலும் கரூரில் செந்தில்பாலாஜி திமுக என்ற ஒன்றை உருவாக்கப் பார்க்கிறார் என்றும் அதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது என்கிறார்கள் நெருக்கமான திமுக தலைமைகள்.

ஆனால் செந்தில்பாலாஜி தரப்பிலோ, ‘ஒரு எதிரின்னா சமாளிக்கலாம். அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் செந்தில்பாலாஜிக்கு எதிராக வெறித்தனமாக வேலைசெய்து கொண்டு இருக்கின்றார். அது போக கரூர் மாவட்ட திமுகவுக்குள்ளயே செந்தில்பாலாஜியை பழிவாங்க இது தான் சரியான நேரம்னு அங்குள்ள நிர்வாகிகள் உள்வேலை பாக்குறாங்க என்றும் செய்திகள் அனல் பறக்கின்றது.

Categories

Tech |