Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

” கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ” அண்ணனை கொன்ற தம்பி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சகோதரரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில்  உள்ள கப்பூர் காலனியில் தணிகைவேல் வந்து என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருடைய பெரியப்பா மகனான சங்கர் என்பவரும் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியாக இருந்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டில் இவர்கள் இருவரும் திருச்சி மாவட்டத்திலுள்ள கள்ளமேடு பகுதிக்கு கரும்பு வெட்டுவதற்காக சென்றுள்ளனர்.

அப்போது இவர்கள் 2 பேருக்கும் இடையே கரும்பு வெட்டிய பணத்தை வாங்குவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தணிகைவேல் சங்கரை கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் தணிகைவேல் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கு தற்போது விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி தணிகைவேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Categories

Tech |