Categories
சினிமா தமிழ் சினிமா

அய்யயோ….!! “விஜய்க்கு தான் அந்த பிரச்சனை வரும் இப்போ அஜித்துக்குமா”?…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

அஜித்தின் ‘வலிமை’ படமும் ‘மெட்ரோ’ படமும் ஒன்றாக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் திரையுலகின் நடிகரான அஜித்தை வைத்து எச் வினோத் இயக்கிய ‘வலிமை’ படம் கடந்த 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் மிகுந்த வரவேற்புடன் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் 2016ம் ஆண்டு ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த ‘மெட்ரோ’ திரைப்படமும் ‘வலிமையை’ திரைப்படமும் ஒன்றாக இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. ‘மெட்ரோ’ திரைப்படம் சென்னையில் செயின் திருடர்கள் செய்யும் அட்டூழியங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வலிமை படத்துடன் ‘மெட்ரோ’ படத்தை ஒப்பிடுவது குறித்து இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்த இரண்டு படங்களையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு கூறுவது துரதிருஷ்டவசமானது என்று கூறலாம். மேலும் இந்த படத்தின் எப்டிஎப்எஸ் ஷோவை பார்த்ததிலிருந்து பலரும் என்னை தொடர்பு கொண்டு இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். இது என்னை பொருத்தவரை தற்செயலான செயல்லாக தான் நான் பார்க்கிறேன். அஜித்தின் இந்த படம் அருமையாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவை மீண்டும் உயிர் பெறச் செய்யும் ஒரு சிறந்த படமாக அமைந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து நான் அஜித் ரசிகனாக அவரின் அடுத்த படத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பொதுவாக விஜய் படங்களுக்கு தான் வெளியாகும் போது இந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும். தற்பொழுது அஜித்தின் ‘வலிமை’ படமும் இந்த சர்ச்சையில் சிக்கி உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |