Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பல்வேறு கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை தங்க நகை கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்ய பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 48 லட்சம் பேர் நகை கடன் வாங்கியதில் 13 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் வைத்த 22.52 லட்சம் பேரில் 10.18 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக கூட்டுறவு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுவரை பயனாளிகள் விவரம் குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சிகள் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு என்ன ஆனது? என பிரச்சாரம் செய்தனர். தேர்தல் நடத்தை விதிகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கலாம். நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் தேர்தல் காரணமாக திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனவும் கூட்டுறவு துறை அறிவித்தது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து விதிகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நகைக்கடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்களாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் ஆய்வு செய்து அவர்களுக்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |