ஐஸ்வர்யாவை மிகுந்த கோபத்துடன் திட்டி தீர்த்த ரஜினி.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக தனித்தனியாக இணையதளத்தில் அறிவித்தனர். இவர்கள் பிரிவதாக அறிவித்து ஒரு மாதம் கடந்தும் இதுவரை எந்த நல்ல செய்தியும் வரவில்லை. இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தார் பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.
ரஜினி, ஐஸ்வர்யா மீது கோபம் கொண்டதால் மனமிறங்கி தனுஷுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார் ஐஸ்வர்யா. ஆனால் தனுஷ் உன்னை போல் என்னால் உடனடியாக முடிவை மாற்றிக்கொள்ள முடியாது எனக்கு சிறிது காலம் வேண்டும் என கூறிவிட்டார். இதனால் ஐஸ்வர்யாவும் அவரின் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இவர்கள் இதுவரையிலும் விவாகரத்துக்கு அப்ளை செய்யாததால் இவர்கள் சேர்ந்து விடுவார்கள் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நைட் பார்ட்டி ஒன்றில் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் தனுஷும் ஐஸ்வர்யாவும் கலந்துகொண்டனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக் கொள்ளவில்லை. இதனால் சினிமாத்துறையினர் இவர்கள் இருவரும் இணைந்து வாழ்வது சந்தேகம்தான். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேர்ந்து வாழாமல் தங்களின் சந்தோஷத்துக்காக பிரிந்து வாழ்வதோடு இப்படி லூட்டி அடித்து வருகின்றனர் என பேச்சு அடிபடுகிறது.
இதற்கிடையில் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் இருக்கிறார். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் இருப்பதை பார்த்து உன்னுடைய சந்தோஷம் தான் உனக்கு முக்கியமா? என்று கடுமையாக ஐஸ்வர்யாவிடம் கோவபட்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்வார்களா என்ற சந்தேகம் அனைவரிடமும் ஏற்படுத்துகிறது.