தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாகவே கொரோனா காரணமாக மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை. எனினும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்துமே கற்பிக்கப்பட்டு வந்தது. கடந்த 2 வருடங்களாக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எதுவுமே நடத்தப்படவில்லை. அவ்வாறு பொதுத்தேர்வுகள் நடத்தாததால் 11 மற்றும் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை நடைபெற்றது.
இதில் 11 ஆம் வகுப்பு சேர்க்கை நேரடியாகவே நடைபெற்றது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதே நேரம் இந்த ஆண்டு 6-9 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது கட்டாயம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான அட்டவணையானது வெளியாகி இருக்கிறது.
ஆனால் 1- 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 6- 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதி பொதுத்தேர்வானது தொடங்கி மே 13 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வுக்கான முடிவுகள் மே 30 ஆம் தேதி அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு மே 2 முதல் மே 4 வரை நடைபெறும். இத்தேர்வு முடிந்து ஜூன் 13 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 24- ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.