ரியல்மி நிறுவனம் தற்போது “புக் பிரேம்” என்ற லேப்டாப்பை வெளியிட்டுள்ளது.
ரியல்மி நிறுவனம் தற்போது “புக் பிரேம்” என்ற லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லேப்டாப் சீனாவில் ஜனவரி மாதம் வெளியான ரியல்மி புக் மேம்படுத்தப்பட்ட வடிவத்தின் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் ரியல்மி புக் மேம்படுத்தப்பட்ட வடிவத்தில் 16 ஜி.பி. LPDDR4x dual- channal ரேம், 512 ஜிபி எஸ்.எஸ். டி. ஸ்டோரேஜ், 2 கே டெலிவிஷன் கொண்ட 14 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 100% sRGB colour gamut, 3:2 ஆஸ்பெக்ட் ஆகியவை கொண்டிருந்தது. இதனையடுத்து 11th Gen Intel core i5-11320H processor , இன்டல் ஷார்ப் எக்ஸ் கிராபிக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் லேப்டாப்பின் விண்டோஸ் 11 ஓ .எஸ்,54Whr பேட்டரி, 65 W அதிவேக சார்ஜிங் டெக்னாலஜி, வேபர் சேம்பர் கூலிங் அமைப்பு, டிடிஎஸ் ஆடியோ தொழில்நுட்பம், டூயல் மைக்குகள், 720 ஹெச்.டி வெப்கேம், பேக்லிட் கீபோர்ட், ஃபிங்கர் பிரின்ட் பட்டன், போன்றவை இந்த புக் பிரைம் லேப் டாப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த லேப்டாப்பின் விலை சுமார் இந்திய மதிப்பில் 55 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனவும் தெரிகிறது.