Categories
சென்னை மாவட்ட செய்திகள்

” பேஸ்புக் காதல் ” மாணவிக்கு நேர்ந்த விபரீதம்…. போக்ஸோவில் தூக்கிய போலீஸ்…!!

பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் படிக்கும் பிளஸ்-1 மாணவியிடம் வலைதளம் மூலமாக பழகியுள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி திருமணம் வரை வந்துள்ளது. ஆனால் மாணவி  அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மாணவியை  கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். அதன்பின் மாணவியை  பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார்.

இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் தன் மகளை காணவில்லை என கூறி புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மாணவி ஆந்திராவில் இருப்பது தெரியவந்துள்ளது. அங்குசென்ற காவல்துறையினர் மாணவியை மீட்டு சந்தோஷை கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |