பிரதமர் மோடி நாட்டின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்வதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதாரத்தில் பின்னடைவு, விலைவாசி உயர்வு போன்றவை தலைவிரித்து ஆடுவதாகவும் இவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே பிரதமர் மோடி முயற்சி செய்கிறார் எனவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “நம் நாட்டிற்கு தேவை நடவடிக்கையே ஒழிய கவனச் சிதைவு அல்ல. ஆனால் பிரதமர் மோடி அதைத்தான் செய்கிறார்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Categories
“மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார் மோடி….!!”ராகுல் குற்றச்சாட்டு…!!
